செய்தி பிரிவின் பிரதானியின் வீட்டிற்குள் புகுந்து சொத்துக்களை அபகரித்த சந்தேக நபர் கைது

பிரதான இலத்திரனியல் ஊடக நிறுவனமொன்றின் செய்தி பிரிவின் பொறுப்பதிகாரியின் பாணந்துறை வீட்டுக்குள் புகுந்து சொத்துக்களை அபகரித்த சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இது இடம்பெற்றுள்ளது.
கம்பளையைச் சேர்ந்த பின்வத்தே தமிந்த எனப்படும் சஜித் பொன்சேகா என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். '
சந்தேக நபர் கடந்த 19 ஆம் திகதி காலை பாணந்துறை கெசல்வத்த பரத்த பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டிற்கு பின்புற ஜன்னல் ஊடாக பிரவேசித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் தம்மிடம் இருந்த 4 தங்க மோதிரங்கள், ஒரு வளையல், 2 பென்டன்ட்கள் மற்றும் ஐம்பதாயிரம் ரூபா பணத்தை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மறைகாணி பாணந்துறை வடக்கு பொலிஸார் பாதுகாப்பு கமெரா காட்சிகளை ஆய்வு செய்து சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளனர். அதன் பின்னர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காக அளுத்கம களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் ஆலோசனையின் பிரகாரம் இது இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர்கள் பல வீடுகள் மற்றும் பல வர்த்தக ஸ்தலங்களுக்குள் புகுந்து திருடப்பட்ட சில சொத்துக்களையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.



