அனுரதாபுரம் எப்பாவலையில் கடத்தப்பட்ட 9வயது சிறுவன் 4 நாட்களுக்குப் பிறகும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை
Prasu
2 years ago
அனுரதாபுரம் எப்பாவலையில் கடத்தப்பட்டதாக நம்பப்படும் ஒன்பது வயது சிறுவன் 4 நாட்களுக்குப் பிறகும், இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
கடந்த திங்கட்கிழமை (19ஆம் திகதி) பி.கே.தேனெத் பிரேமசுந்தர, என்ற இந்த சிறுவன், அப்பகுதியில் மின்சார பொறியியலாளராக பணிபுரிந்த ஒருவரால் கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
இந்த கடத்தலில், குறித்த நபர் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகித்து சிறுவனின் பெற்றோர் போலீசில் முறைப்பாட்டை அளித்துள்ளனர்.
அவர், குறித்த சிறுவனுடன் நட்பாக இருந்ததாகக் கூறப்படுகிறது, பின்னர் அவரைக் கடத்திச் சென்றதாக கூறப்படும் அவரும் காணாமல் போயுள்ளார்.




