பேராதனை மாணவர் ஒன்றியத்தின் தலைவரை கைது செய்ய உத்தரவு
Prathees
2 years ago

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் அனுருத்த விதானகேவை கைது செய்து
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பேராதனை பிரதான நீதவான் பொலிஸாருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதேவேளைஇ மேற்படி பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரை தாக்கிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 12 மாணவர்களில் 06 பேர் அடையாள அணிவகுப்பின் போது அரசாங்க தரப்பு சாட்சிகளால் அடையாளம் காணப்பட்டனர்.
அனைத்து மாணவர்களும் ஜனவரி 4 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.



