சீன அரசாங்கத்திடம் இருந்து பெறப்படும் எரிபொருள் மானியத்தை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க தீர்மானம்!
Mayoorikka
2 years ago

சீன அரசாங்கத்திடம் இருந்து பெறப்படும் எரிபொருள் மானியத்தை ஒரு ஹெக்டேயருக்கு குறைவான நெல் பயிரிடும் ஒவ்வொரு விவசாயிக்கும் இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க சீன அரசாங்கம் 10.06 மில்லியன் லீட்டர் எரிபொருளை இலங்கைக்கு வழங்கியதாகவும் நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு 6.98 மில்லியன் லீட்டர் வழங்குவதாகவும் விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
எஞ்சிய பகுதி நாட்டின் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட உள்ளது.
அந்தந்த மாவட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் எரிபொருள் விநியோகம் செய்யப்படுகிறது.



