ஜனவரி முதல் மின் கட்டணங்கள் அனுப்பப்படும் முறையை வெளியிட்ட அமைச்சர்
Mayoorikka
2 years ago
அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் அச்சிடப்பட்ட மின்சாரக் கட்டணத்திற்குப் பதிலாக, தொலைபேசி குறுஞ்செய்தி (SMS) மூலம் மின்சாரக் கட்டணம் அறிவிக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
அதற்காக மின்சார சபையின் கணனி முறைமை தற்போது புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும், நகர்ப்புறங்களை மையப்படுத்தி மின்சார கட்டணத்தை தொலைபேசிக்கு அனுப்பும் நடவடிக்கை ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.