இலங்கையில் அரச பணியாளர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் சுற்றறிக்கை வெளியீடு
Nila
2 years ago

2022 ஆம் ஆண்டிற்கான கூட்டுத்தாபனங்கள், திணைக்களங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு (போனஸ்) வழங்குவது தொடர்பாக இரண்டு சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, 2021 நிதியாண்டில் இலாபம் ஈட்டிய வணிகக் கூட்டுத்தாபனங்கள், திணைக்களங்கள், சபைகள் மற்றும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் பணியாளர்களுக்கு அதிகபட்ச வரம்பு 25 000 ரூபாவுக்கு உட்பட்டு ஊக்குவிப்பு கொடுப்பனவை செலுத்துமாறு திறைசேரி சுற்றறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 2021 நிதியாண்டில் நட்டத்தைப் பதிவு செய்த வணிகக் கூட்டுத்தாபனங்கள், நியதிச் சட்ட நிறுவனங்கள் மற்றும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் ஊழியர்களுக்கு, நிறுவனத்தின் லாபத்தின் அடிப்படையில் ஊக்குவிப்பு கொடுப்பனவு பெறுவதற்கான உரிமை இல்லை என்று சுற்றறிக்கைகள் தெரிவிக்கின்றன.



