8 பில்லியன் ரூபாவினை ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கியுள்ளது - ஜனாதிபதி ஊடக பிரிவு
Kanimoli
2 years ago

8 பில்லியன் ரூபாவினை ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
1.2 மில்லியன் விவசாயக் குடும்பங்களுக்கு பயனளிக்கும் வகையில் ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு ஹெக்டேருக்கு குறைவாக சாகுபடி செய்யும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10,000 ரூபா வழங்கப்படவுள்ளது.
இதேவேளை ஒரு ஹெக்டேருக்கு மேல் சாகுபடி செய்யும் குடும்பங்களுக்கு 20,000 ரூபா வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மேலும், அடுத்த வாரம் முதல் விவசாயிகளின் கணக்கில் இந்த பணம் வைப்பு செய்யப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.



