கிளிநொச்சியில் கூலித்தொழிலாளி ஒருவரின் நேர்மையான செயற்பாடு
Kanimoli
2 years ago

கிளிநொச்சியில் கூலித்தொழிலாளி ஒருவரின் நேர்மையான செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
கனகாம்பிகை குளம் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் வீதியில் கண்டெடுத்த பெருந்தொகை பணத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
சுமார் 95,000 பணத்தினை வீதியில் எடுத்தவர் கிராம அபிவிருத்தி சங்கத்திடம் கையளித்திருந்துள்ளார். எனினும் மேற்படி பணத்திற்கு யாரும் உரிமை கோராத நிலையில் குறித்த பணம் நேற்று கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் குறித்த பணத்தினை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது ஏழ்மையான நிலையிலும் வீதியில் கிடந்து எடுத்த பணத்தை நேர்மையான முறையில் ஒப்படைத்தவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.



