தென்கொரியாவில் ஒரே நாளில் 87 ஆயிரத்து 559 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- 56 பேர் கொரோனாவுக்கு பலி
#SouthKorea
#Covid 19
Prasu
2 years ago
சீனாவைப்போல தென்கொரியாவும் கொரோனா தொற்றின் புதிய, புதிய அலைகளால் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
அந்த வகையில் தென்கொரியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
உயிரிழப்பும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக அங்கு நேற்று ஒரே நாளில் 87 ஆயிரத்து 559 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 56 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.



