மேலும் 10 வகையான பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்
Prathees
2 years ago

சுற்றுலா, பாதுகாப்பு மற்றும் விளையாட்டு தொடர்பான மேலும் 10 வகையான பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
சுற்றுலாத்துறைக்கு தேவையான ஆற்றல் பானங்கள், CCTV கமரா அமைப்பு உபகரணங்கள், தளபாடங்கள் உற்பத்திக்கு தேவையான மெல்லிய பலகைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களும் அடங்குவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தும் பொருட்களால் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு வசதிகள் கிடைக்குமா என்பது குறித்து ஆராயவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.



