எப்பாவல பிரதேசத்தை சேர்ந்த ஒன்பது வயது மாணவன் காணாமல் போயுள்ளார்

எப்பாவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரலோகம, கடதீவுல பிரதேசத்தில் வசிக்கும் 9 வயதுடைய ஆண் குழந்தை யாரோ ஒருவரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக குழந்தையின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
பி.கே.தேனெத் கௌரவ் பிரேமசுந்தர என்ற ஆண் குழந்தையே கடத்தப்பட்டுள்ளது.
இவர் கிரலோகம சுபோதி மகா வித்தியாலயத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்று வருகின்றார்.
நேற்றிரவு 8.30 மணிக்குப் பின்னர் குழந்தை வீட்டில் இல்லாததை அறிந்து தேடியபோதும் இதுவரையில் அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என குழந்தையின் தாய் கூறுகிறார்.
இந்த மாணவன், கிரகலோகம பிரதேசத்தில் எலக்ட்ரீசியன் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் எலக்ட்ரீசியன் ஒருவருடன் நட்பாக இருந்ததாகவும், குறித்த எலெக்ட்ரீஷியனே குழந்தையை கடத்திச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் குழந்தையின் தாய் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் எப்பாவல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



