ஈழத்து பாடகர் தேனிசைக்குரலோன் சாந்தனின் 61 ஆவது பிறந்தினம் இன்று!
Mayoorikka
2 years ago

ஈழத்தமிழர்களின் நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும் தேனிசைக்குரலோன் S.G சாந்தன் அவர்களின் 61 ஆவது பிறந்தினம் இன்று ஆகும்.
இந்த மண் எங்களின் சொந்த மண் எனும் பாடலின் மூலம் தனது இசைப்பயணத்தை ஆரம்பித்த சாந்தன் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஷ்வரர் ஆலயத்தின் புகழ்கூறும் "பிட்டுக்கு மண்சுமந்த பெருமானார் கொக்கட்டிச்சோலையிலே உருவானார்" மற்றும் அம்பிளாந்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் புகழ் கூறும் தோரணம் இசைப்பேழையில் உள்ள மூன்று பாடல்கள் என பல பாடல்களை பாடி தமிழ் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர் சிறுநீரக கோளாறுகாரணமாக 26 பெப்ரவரி 2017 அன்று காலமானது குறிப்பிடத்தக்கது.



