இலங்கை இளம் அரச உத்தியோகத்தர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்கத் தயார்-ஜனாதிபதியின் செயலாளர்

Prasu
2 years ago
இலங்கை இளம் அரச உத்தியோகத்தர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்கத் தயார்-ஜனாதிபதியின் செயலாளர்

அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இளம் அரச உத்தியோகத்தர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கத் தயார் என அறிவிக்கபபட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இதனை தெரிவித்துள்ளார் .

அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதில் அரச உத்தியோகத்தர்களுக்கு பெரும் செல்வாக்கு செலுத்த முடியும் என தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர், அதற்கு அரச உத்தியோகத்தர்கள் தீவிரமான பங்களிப்பை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இலங்கை நிர்வாக சேவையின் 2012 ஆம் ஆண்டுக்கான குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதியின் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் .

தற்போதைய ஜனாதிபதி பல சவால்களுக்கு மத்தியில் நாட்டின் பொறுப்பை ஏற்று தற்போது முறையாக பொருளாதாரத்தை கட்டியெழுப்பி வருவதாக ஜனாதிபதியின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார் .

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!