தரம் 5 தேர்வு முடிவுகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும்
Prabha Praneetha
2 years ago
அண்மையில் நடத்தப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்தார்.
பரீட்சை பெறுபேறுகளை உரிய நேரத்தில் மதிப்பீடு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் 2,894 பரீட்சை நிலையங்களில் இரண்டு அமர்வுகளாக நடத்தப்பட்ட பரீட்சைக்கு 334,698 பரீட்சார்த்திகள் தோற்றியதாகவும் அவர் கூறினார்.