ஹங்வெல்லை பகுதியில் இடம் பெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது
Kanimoli
2 years ago

ஹங்வெல்லை பகுதியில் இடம் பெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.
உணவக உரிமையாளர் ஒருவர் மீது நடத்துவதற்காக பிரவேசித்த உந்துருளி காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஹங்வெல்லை பஹத்கம பகுதியில் உள்ள குறுக்கு வீதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் குறித்த உந்துருளி மீட்கப்பட்டது.
குறித்த உந்துருளின் அடிச்சட்ட இலக்கம் மற்றும் இயந்திர இலக்கம் என்பன அழிக்கப்பட்டுள்ளமை காவல்துறை மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்திக் கொல்லப்பட்டவர் ஹங்வெல்லை காவல்துறையின் பொது பாதுகாப்பு குழு அங்கத்தவராவார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.



