இலங்கையில் வேகமாக பரவும் மற்றுமொரு நோய்! அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை
Mayoorikka
2 years ago
இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் வேகமாக பரவுவதால், அவதானமாக இருக்குமாறு சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
சிறு குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கே அதிக பாதிப்பு ஏற்படுவதாக இலங்கை நுண்ணுயிரியல் நிபுணர்கள் நிறுவகத்தின் தலைவர் வைத்தியர் ரோஹினி வடநம்பி தெரிவித்தார்.
இந்த இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பரவுவதால், கடுமையான தொண்டை புண் மற்றும் காய்ச்சலைக் காணலாம், எனவே எப்போதும் முகமூடிகளை அணிவது மற்றும் கைகளை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.