பேந்தோட்டையில் இடம்பெற்ற விருந்தில் போதைப்பொருளுடன் 30 பேர் கைது
Prathees
2 years ago

பெந்தோட்டாவின் போதிமால்வ பகுதியில் உள்ள உல்லாச விடுதியொன்றில் இடம்பெற்ற விருந்தொன்றை சுற்றிவளைத்த 30 பேர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் பாவனையில் விருந்தொன்று நடைபெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (17) இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் வத்தளை, நாரஹேன்பிட்டி, கொட்டாஞ்சேனை, மாளிகாவத்தை, மட்டக்குளி, வலஸ்முல்லை மற்றும் கொழும்பு 12 ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என 21 வயதுக்கும் 37 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
சந்தேகநபர்கள் இன்று (18) பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.



