போதைப்பொருள் தொடர்பான சோதனைகளில் 90,000 பேர் கைது
Prathees
2 years ago

இந்த வருடத்தில் இதுவரை 90,000 பேர் போதைப்பொருள் தொடர்பான சோதனைகளில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1,441 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 45,801 சந்தேகநபர்கள் அங்கு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இந்த வருடத்தில் 11,881 கிலோ கஞ்சா மற்றும் 34,062 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 109 கிலோ ஐஸ் போதைப்பொருள் மற்றும் 10,532 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.



