லண்டன் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட விபரீதம் - ஆபத்தான நிலையில் மூவர்
Nila
2 years ago

லண்டனில் இசைநிகழ்ச்சி நடைபெற்ற Brixton O2 Academyக்கு வெளியே ஏற்பட்ட நெரிசலில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவர்களது உடல்நிலை மோசமாக இருப்பதாகப் பிரித்தானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெரிய கும்பலொன்று இசைநிகழ்ச்சி நடைபெற்ற அரங்கத்தினுள் அத்துமீறி நுழைய முயன்றதாக அவசரத் தொலைபேசி அழைப்புகள் பெறப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
அதனால் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி சிலர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள், அவசர மருத்துவ வாகனப் பணியாளர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி வழங்கினர்.
காயமடைந்தவர்களில் 8 பேர் மருத்துவமனைக்குக் கொண்டுச்செல்லப்பட்டனர். சிராய்ப்புக் காயம் ஏற்பட்ட மேலும் இருவருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.
சம்பவம் குறித்து விசாரணைகள் நடைபெறுகின்றன.



