49 வயதுடைய பெண் ஒருவரை வன்புணர்ந்த குற்றவாளி ஒருவருக்கு 11 வருட கடூழியச் சிறைத்தண்டனை
Kanimoli
2 years ago

49 வயதுடைய பெண் ஒருவரை வன்புணர்ந்த குற்றவாளி ஒருவருக்கு 11 வருட கடூழியச் சிறைத்தண்டனையும், 15,000 ரூபா அபராதமும் விதித்து ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்ற நீதிவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை, படகிரியவில் வீடு ஒன்றுக்குள் இரவு நேரத்தில் கூரையை பிரித்து நுழைந்த சந்தேக நபர் பெண்ணை வன்புனர்வுக்குட்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் , பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கவும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை, பதகிரிய, யஹங்கல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே பெண்ணை பாலியன் வன்புனர்வுக்கு உட்படுத்தியவராவார்.



