வடகடலில் 60 மில்லியனுக்கும் அதிகம் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது
Prathees
2 years ago
வடகடலில் 60 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்பில் இருந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அங்கு 181 கிலோ கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை சோதனையிட்ட போது, 04 சாக்குகளில் பொதி செய்யப்பட்ட இந்த கேரள கஞ்சாவை கண்டெடுத்ததாக கடற்படையினர் தெரிவித்தனர்.