நில்வலா கங்கையில் முதலையால் இழுத்து செல்லப்பட்டவரின் உடற்பாகங்கள் மீட்பு
Prasu
2 years ago

மாத்தறை, பீக்வெல்ல, நில்வலா ஆற்றுக்கு அருகில் நபர் ஒருவரை முதலை இழுத்துச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபருடையது என சந்தேகிக்கப்படும் ஒரு பை மற்றும் ஒரு காலணிகள் அந்த இடத்தில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன் அருகில் குறித்த நபருடையது என சந்தேகிக்கப்படும் பல உடல் பாகங்களும் காணப்பட்டன.
சடலத்தின் பாகங்கள் மாத்தறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.



