துறவிகளாக பல்கலைக்கழகங்களுக்குள் செல்வோர் சாமானியர்களாக வெளியேறுகின்றனர்: ஜனாதிபதி
Prathees
2 years ago

துறவிகளாக பல்கலைக்கழகங்களுக்குள் பிரவேசிக்கும் பெருமளவிலான மக்கள் சாமானியர்களாக அங்கிருந்து வெளியேறுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் அவர் இதனை தெரிவித்தார்.
இன்றுஇ பெருமளவிலான மக்கள் துறவிகளாக பல்கலைக்கழகங்களுக்குள் நுழைகிறார்கள்,
ஆனால் இறுதியில் சாமானியர்களாக மாறுகிறார்கள்.
ஆரம்பத்தில், நாம் துறவிகளாக பல்கலைக்கழகத்தில் நுழைந்தால், அது மாற்றப்படாது என்று முடிவு செய்ய வேண்டும்.
அத்துடன் துறவிகள் தமது அங்கியை கழற்ற வேண்டும் என்றால் அவர்கள் மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாட வேண்டும்.
இந்தநிலையில் தற்போதுள்ள முறை தொடர்ந்தால், இலங்கையின் சமூகத்தின் ஒழுங்குப்; பறிபோகும் என்று ரணில் குறிப்பிட்டார்.



