இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்ளும் எகிப்து ஜனாதிபதி ஃபத்தா அல்-சிசி

Prasu
2 years ago
இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்ளும் எகிப்து ஜனாதிபதி ஃபத்தா அல்-சிசி

இந்திய குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

எகிப்து அரபுக் குடியரசின் அதிபர் 2023ம் ஆண்டின் இந்திய குடியரசு தினத்தில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொள்வது 

இதுவே முதல் முறை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அல்-சிசிக்கு அனுப்பிய முறையான அழைப்பிதழை, கடந்த அக்டோபர் 16ம் தேதி அன்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் எகிப்திய அதிபரிடம் அளித்தார். 

இரு நாடுகளும் இந்த ஆண்டு தூதரக உறவுகளை நிறுவியதன் 75வது ஆண்டு விழாவை கொண்டாடுகின்றன. 

மேலும், இந்தியாவும் எகிப்தும் நாகரீக மற்றும் ஆழமான வேரூன்றிய மக்களிடையேயான உறவுகளின் அடிப்படையில் அன்பான மற்றும் நட்புறவை அனுபவிக்கின்றன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!