அடுத்த ஆண்டு பொருளாதாரத்தை இயக்க தினசரி 13 பில்லியன் ரூபா கடன் பெறவேண்டும்!
Prathees
2 years ago

நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கு நாளாந்தம் 13.6 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான கடனாகப் பெற வேண்டியிருக்கும் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், இவ்வாறு கடன் பெற்று நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிக்க முடியாது என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
நாட்டைச் சரியான பாதையில் இட்டுச் செல்வதற்கு மத்திய வங்கியின் நிதிக் கொள்கையும் நிதிக் கட்டுப்பாட்டுக் கொள்கையும் ஒன்றுக்கொன்று இணக்கமான முறையில் நடத்தப்பட வேண்டுமென பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள மேலும் தெரிவித்துள்ளார்.



