தலதா மாளிகையின் மின்கட்டணத்தை செலுத்த முடியவில்லை...! உதவி செய்யுமாறு கோரிக்கை
Prathees
2 years ago

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் கடந்த ஒக்டோபர் மாதத்திற்கான மின்சார கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் உள்ளதாக அதற்குப் பொறுப்பான பிரதீப் நிலங்க தெலபண்டார பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
28 இலட்சம் ரூபாவை எட்டியுள்ள ஒக்டோபர் மாதத்திற்கான அரண்மனையின் மின்கட்டணத்திற்கான பில்லில் திருத்தம் செய்யுமாறு பிரதீப் நிலங்க ஆணைக்குழுவிடம் கோரியுள்ளார்.
அண்மையில் மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் மல்வத்து அஸ்கிரி மகா நாயக்க தேரர்களுடன் பொதுப் பயன்பாட்டுத் தலைவர் கலந்துரையாடியதுடன், இலங்கை மின்சார சபையுடன் கலந்துரையாடி மின் கட்டணத்தைக் குறைப்பதற்கான வேலைத்திட்டத்தை தயாரிப்பதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது மேற்கண்ட முறைப்படி பில் கணக்கிடப்பட்டு வருகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



