இலங்கைக்கு சீனா வழங்கியுள்ள உறுதி!
Prathees
2 years ago

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கைக்கான சீன தூதுவர் குய் ஜென்ஹொங்க்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று (25) இடம்பெற்றுள்ளது.
இதன்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடி குறித்து இரு தரப்புக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கு சீனா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என சீன தூதுவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.
சீனா தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்களில் வெளியாகும் பொய்யான தகவல்களை கண்டிப்பதாகவும் சீன தூதுவர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.



