நாட்டின் டொலர்களை இழந்த மற்றொரு திட்டம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது!

33 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கறவை மாடுகளில் கிட்டத்தட்ட 90 வீதமான கறவை மாடுகளை இறக்குமதி செய்ய 11 மில்லியன் 9 தசம புள்ளிகள் செலவிடப்பட்டுள்ளதாக தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
2018 ஆம் ஆண்டில், தேசிய கால்நடை அபிவிருத்திச் சபை கறவை மாடுகளை இறக்குமதி செய்வதற்காக முன்பணமாக 11.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்ட போதிலும், கால்நடைகள் பெறப்படவில்லை அல்லது பணத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
2017 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் தற்போதைய செயற்பாடுகளை ஆராய்வதற்காக பொது நிறுவனங்களுக்கான குழு பாராளுமன்றத்தில் கூடிய போது அது இடம்பெற்றது. வேலார்டு திட்டத்தின் கீழ் இந்த தொகை முன்பணமாக செலுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் இருந்து 2012, 2013 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் 33.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் இறக்குமதி செய்யப்பட்ட 4,495 கறவை மாடுகளில் 3,991 மாடுகள் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதன்படி, இது தொடர்பான விசேட அறிக்கையொன்றை கோப் குழுவிடம் வழங்குமாறு கணக்காய்வாளர் நாயகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.



