இலங்கைக்கான நேரடி விமான சேவைகளை மேலும் அதிகரிக்க எமிரேட்ஸ் விமான நிறுவனம் தீர்மானம்
Prasu
2 years ago

இலங்கைக்கான நேரடி விமான சேவைகளை அதிகரிக்க எமிரேட்ஸ் விமான நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி கொழும்புக்கும் டுபாய்க்கும் இடையிலான தினசரி பயணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து டிசம்பர் 1ம் திகதி முதல் கூடுதல் பயணத்தை எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.
அதன்படி, கொழும்புக்கும் துபாய்க்கும் இடையே தினசரி இரண்டு நேரடி விமானங்கள் இயக்கப்படும், மேலும் ஒரு விமானம் மாலைதீவு, மாலே வழியாகச் இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.



