யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் சித்திரவதையில் படுகாயமடைந்த மாணவன் வைத்தியசாலையில்
Prathees
2 years ago

யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் நான்காம் வருட மாணவர்கள் குழுவொன்று முதலாம் வருட மாணவனை தாக்கியதில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி கடந்த 22 ஆம் திகதி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
வன்கொடுமை சம்பவம் காரணமாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் தாக்குதலுக்கு உள்ளான மாணவன் யாழ்.பல்கலைக்கழக ஒழுக்காற்று குழுவிலும் முறைப்பாடு செய்துள்ளார்.
அந்த விசாரணைக்கு மேலதிகமாக யாழ்ப்பாணம் பொலிஸாரும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



