இந்தோனேசியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 268 ஆக உயர்வு

#Indonesia #Earthquake #Death
Prasu
2 years ago
இந்தோனேசியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 268 ஆக உயர்வு

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் நகரில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

ரிக்டர் அளவு கோலில் 5.6 ஆக பதிவானது. நிலநடுக்கத்தின் அதிர்வால் வீடுகள், அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட கட்டிங்கள் பயங்கரமாக குலுங்கின. 

இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தப்படி கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சம் புகுந்தனர். 

இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 268 ஆக உயர்ந்துள்ளது. இதில் பெருமளவில் குழந்தைகளே உயிரிழந்து உள்ளனர். 

அவர்களில் பலர் பள்ளி குழந்தைகள் என தெரிய வந்து உள்ளது. 151 பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தலைநகர் ஜகர்த்தாவின் தெற்கு பகுதியில் 2,200 வீடுகள் சேதமடைந்து உள்ளன. 

இதுவரை 5,300-க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளதாக இந்தோனேசிய பேரிடர் மீட்பு கழகம் தெரிவித்து உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!