ஆசிரியரை தாக்கி சண்டித்தனம் புரிந்தோரை கைது செய்யுமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பணிப்புரை
Kanimoli
2 years ago

யாழ்.ஒஸ்மானியா கல்லுாரிக்குள் புகுந்து ஆசிரியரை தாக்கி சண்டித்தனம் புரிந்தோரை கைது செய்யுமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பணிப்புரை விடுத்துள்ளார்.
இன்று பாடசாலை மாணவன் ஒருவன் இடைவேளைக்கு சென்று வகுப்புக்கு திரும்பாத நிலையில் ஆசிரியர் அவரைத் தேடிச் சென்றுள்ளார்.
இதன்போது மாணவன் மலசல கூட பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடியதை கண்ட ஆசிரியர் அவரை நாடிச் சென்ற நிலையில் மாணவன் மதில் பாய்ந்து சென்றதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் சிலரை அழைத்து வந்து ஆசிரியர் மீது பாடசாலையில் வைத்து தாக்குதல் நடத்தியதில் ஆசிரியர் காயமடைந்துள்ளார்.
குறித்த தகவல் வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு சென்ற நிலையில் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யுமாறு ஆளுநர் பொலிசாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



