6 ஆண்டுகளில் ரூ.12,700 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்த ராணுவத் தளபதி

#Pakistan
Keerthi
2 years ago
6 ஆண்டுகளில் ரூ.12,700 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்த ராணுவத் தளபதி

கடந்த ஆறு ஆண்டுகளில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்கள் கடுமையாக உயர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதனை அடமேஜிங் அறிக்கை தெரிவித்துள்ளது.ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவின் பதவிக்காலம் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் முடிவடைய உள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் பத்திரிகையாளர் அஹ்மத் நூரானி, கமர் ஜாவேத் பஜ்வாவின் குடும்ப உறுப்பினர்கள் புதிய தொழிலைத் தொடங்கி உள்ளனர். பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் பண்ணை வீடுகளை வாங்கி உள்ளனர். 

மேலும் வெளிநாட்டு சொத்துக்களை வாங்கி அதிக பணம் சம்பாதித்ததாகக் கூறி உள்ளார். பஜ்வாவின் மனைவி ஆயிஷா அம்ஜத், அவரது மருமகள் மஹ்னூர் சபீர் மற்றும் பிற நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் உட்பட குடும்பத்தின் நிதி அதிகரித்து உள்ளது. 

"ஆறு ஆண்டுகளில், இரு குடும்பங்களும் கோடீஸ்வரர்களாகி, சர்வதேச வணிகத்தைத் தொடங்கி உள்ளனர். பல வெளிநாட்டு சொத்துக்களை வாங்கத் தொடங்கினர். தங்கள் மூலதனத்தை வெளிநாடுகளுக்கு மாற்றத் தொடங்கினர். 

இஸ்லாமாபாத் மற்றும் கராச்சியில் உள்ள பெரிய பண்ணை வீடுகள், லாகூரில் உள்ள ஒரு பெரிய ரியல் எஸ்டேட் போர்ட்போலியோ, மற்றும் பாகிஸ்தானுக்குள்ளும் வெளியிலும் கடந்த ஆறு ஆண்டுகளில் பாஜ்வா குடும்பத்தால் திரட்டப்பட்ட அறியப்பட்ட சொத்துக்கள் மற்றும் வணிகங்களின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.12,700 கோடிக்கும் அதிகமாகும்" என்று அறிக்கை கூறியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!