காட்டில் வேட்டைக்குச் சென்ற 80 வயதான முதியவர்: நாய் செய்த செயல்

Mayoorikka
2 years ago
 காட்டில் வேட்டைக்குச்  சென்ற 80 வயதான முதியவர்: நாய் செய்த செயல்

அமெரிக்காவில் காட்டில் காணாமல் போன முதியவரை நாய் ஒன்று காப்பாற்றிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 மிச்சிகன் மாகாணத்தில் 80 வயதான முதியவர் ஒருவர் காட்டில் வேட்டைக்குச் சென்ற போது, ஆற்றில் தவறி விழுந்துள்ளார். 

மேலும் காட்டுப் பகுதியில் அவர் தொலைந்து போனதற்கு அடையாளமாக 3 முறை துப்பாக்கியால் சுட்ட சத்தத்தை அந்த முதியவரின் மனைவி கேட்டுள்ளார்.  

இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், முதியவரை தேடும் பணியில் கே9-லோகி என்ற பொலிஸ் நாய் களமிறக்கப்பட்டது.

தீவிர தேடுதலுக்குப் பிறகு ஆசேபில் என்ற ஆற்றின் கரையோரமாக முதியவரை அந்த பொலிஸ் நாய் கண்டுபிடித்தது.

இதையடுத்து அந்த முதியவர் காப்பாற்றப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் நலமுடன் இருப்பதகாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

குறித்த நாயின் செயற்பாட்டிற்காக பாராட்டுக்களும் குவிந்துள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!