கவனத்தை இழந்தால் 3 ஆண்டுகளில் சாலை விபத்துகள் 50,000 ஆக அதிகரிக்கும் அபாயம்

Prathees
2 years ago
கவனத்தை இழந்தால் 3 ஆண்டுகளில் சாலை விபத்துகள் 50,000  ஆக  அதிகரிக்கும் அபாயம்

வீதி விபத்துக்கள் மற்றும் வீதி விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

போக்குவரத்து விதிகளை முறையாக கடைப்பிடிப்பதன் மூலம் இவ்வாறான அனைத்து விபத்துக்களையும் தடுக்க முடியும் என தொற்றா நோய்கள் பிரிவின் விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் தலைவர் டொக்டர் சமித சிரிதுங்க தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி இலக்குகளின்படி, 2030 ஆம் ஆண்டளவில், இந்த நாட்டில் 50 சதவீத போக்குவரத்து விபத்துக்கள் குறைக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு தரப்பினரும் உரிய கவனத்துடன் செயற்பட்டால் இலக்கை இலகுவாக அடைய முடியும் என கலாநிதி சமித சிரிதுங்க மேலும் சுட்டிக்காட்டினார்.

வீதி விபத்துக்களை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் 2025ஆம் ஆண்டுக்குள் வீதி விபத்துக்களினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 50,000 ஆக அதிகரிக்கும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!