53 ஆண்டுகளில் முதல் தேர்தல் தோல்வியைச் சந்தித்த மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹாதீர் முஹமட்
#Election
Keerthi
2 years ago

மலேசியாவின் மூத்த தலைவரான மஹாதீர் முஹமட் 53 ஆண்டுகளில் தனது முதல் தேர்தல் தோல்வியை சனிக்கிழமையன்று சந்தித்தார். இது ஏழு தசாப்த கால அரசியல் வாழ்க்கையின் முடிவைக் குறிக்கும்.
97 வயதான மகாதீர், இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக மலேசியாவின் பிரதம மந்திரியாக பதவி வகித்தவர். லங்காவி தீவுத் தொகுதியில் தனது நாடாளுமன்ற இடத்தைத் தக்கவைக்கத் தவறி, ஐந்து முனைப் போராட்டத்தில் நான்காவது இடத்தைப் பிடித்தார்.
மஹாதீர் தனது 93ஆவது பிறந்த நாளுக்கு இரண்டு மாதங்களே உள்ள நிலையில், 2018ல் இரண்டாவது முறையாக பிரதமரானபோது, ‘உலகின் மிகவும் வயதான தற்போதைய பிரதமர்’ என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்தமை குறிப்பிடத்தக்கது.



