விலைவாசி உயர்வால் குழந்தைகளிடையே துரித உணவு நுகர்வு குறைவு
Prabha Praneetha
2 years ago

சந்தையில் துரித உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்புடன் சிறுவர்களின் துரித உணவு பாவனை குறைந்துள்ளதாக இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் போஷாக்கு திணைக்களத்தின் தலைவர் டொக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
துரித உணவுகளை உட்கொள்வதைக் குறைப்பதன் விளைவாக நீரிழிவு போன்ற தொற்றாத நோய்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையில் பாரிய குறைப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இந்த நிலையில் நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஊட்டச்சத்து மற்றும் உணவு கிடைப்பது குறித்த தரவுகளை சேகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
நாட்டிற்குள் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் நோக்கில் தொடர்புடைய தரவுகளை சேகரிக்கும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என கலாநிதி ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.



