வயதான தாய் ஒருவரை சாலையில் நிர்க்கதியாக விட்டுச்சென்ற சம்பவமொன்று பதிவு
Kanimoli
2 years ago

இரத்தினபுரி பகுதியில் வயதான தாய் ஒருவரை சாலையில் நிர்க்கதியாக விட்டுச்சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இரத்தினபுரி பகுதியில் வயதான தாயொருவரை முச்சக்கரவண்டியில் ஏற்றிக்கொண்டு வந்த நபரொருவர் வீதியொன்றில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து தகவல் அறிந்த இரத்தினபுரி பொலிஸார் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன், தற்போது அவர் கலவானை முதியோர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வயோதிப தாயை வீதியில் விட்டுச்சென்ற நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் இரத்தினபுரி பொலிஸாருக்கு அறிவிக்குமாறு இரத்தினபுரி பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.



