நியூஸிலாந்தில் வீடு வாங்கினால் புதிய Tesla கார் வழங்குவதாக விளம்பரம் செய்த நபர்

Prasu
2 years ago
நியூஸிலாந்தில் வீடு வாங்கினால் புதிய Tesla கார் வழங்குவதாக விளம்பரம் செய்த நபர்

நியூஸிலாந்தில் நபர் ஒருவர் வீட்டை வாங்குவோருக்கு இலவசமாகப் புதிய Tesla காரையே கொடுப்பதாக விளம்பரம் செய்துள்ளார்.

நியூஸிலந்தில் Tesla காரின் விலை சுமார் 72,400 டொலர்களாகும். புதிதாகக் கட்டப்பட்ட அந்த ஐந்தறை வீடு ஒக்லாந்து நகரில் உள்ளது.

அதன் விலை சுமார் 1.8 மில்லியன் டொலர் என்று The Guardian செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் அதே வட்டாரத்தில் 400க்கும் அதிகமான வீடுகள் விற்பனைக்கு உள்ளன.

நியூஸிலந்தில் வீட்டு விலைகள் சரிந்து வந்தாலும் வட்டி விகிதம் அதிகரித்து வருவதால் விற்பனையாகும் வீடுகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

அதனால் உரிமையாளர்கள் வீடுகளை விற்கப் பல்வேறு நூதன வழிகளை நாடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!