மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய குறுகிய அளவிலான ஏவுகணை சோதனை மேற்கொண்ட வடகொரியா
#NorthKorea
#Missile
Prasu
2 years ago
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு மட்டும் இது வரை 40-க்கும் மேற்பட்ட சோதனைகளை அந்நாடு நடத்தி அச்சுறுத்தி உள்ளது.
இந்த நிலையில் வடகொரியா இன்று அதிகாலை மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய குறுகிய அளவிலான ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக தென்கொரியா தெரிவித்து உள்ளது.
கிழக்கு கடல் பகுதியில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது. ஆனால் சேத விவரம் குறித்து உடனடியாக தகவல் எதுவும் தெரியவில்லை.
தென்கொரியா அணு ஆயுத சோதனையை தொடங்கி உள்ளதற்கு பதிலடியாக இந்த ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியதாக தெரிகிறது