திலங்கவுக்கு இரண்டரை கோடி வழங்குமாறு அர்ஜுனன் ரணதுங்கவுக்கு நீதிமன்றம் உத்தரவு

Prathees
2 years ago
திலங்கவுக்கு இரண்டரை கோடி வழங்குமாறு அர்ஜுனன்  ரணதுங்கவுக்கு நீதிமன்றம் உத்தரவு

திலங்கவுக்கு இரண்டரை கோடி வழங்குமாறு அர்ஜுனன்  ரணதுங்கவுக்கு நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் கிரிக்கெட் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்கவுக்கு எதிராக 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவதூறான கருத்தை வெளியிட்டதாக முன்னாள் கிரிக்கட் தலைவர் திலங்க சுமதிபாலவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டினை பரிசீலித்த கல்கிஸ்ஸ  நீதிமன்றம் திலங்க சுமதிபாலவிற்கு இரண்டரை கோடி ரூபா நட்டஈடு வழங்குமாறு இன்று (17) உத்தரவிடப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தலைவர் பதவி உட்பட எந்தவொரு பதவிக்கும் திலங்க சுமதிபால பொருத்தமானவர் அல்ல எனக் கூறி அவமதிப்பு மற்றும் அபத்தமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தமை தொடர்பில் அர்ஜுன ரணதுங்கவிடம் இருந்து ஐந்து கோடி ரூபா நட்டஈடு அறவிடப்பட வேண்டும் என திலங்க சுமதிபால தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டிருந்தார்.

குறித்த அறிக்கையினால் திலங்க சுமதிபால பாரியளவில் பாரபட்சமும் அவமானமும் அடைந்துள்ளதாகத் தெரிவித்து மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை நீதிபதிகள் ஹர்ஷ சேதுங்க மற்றும் துசித தேவப்பிரிய குணவர்தன ஆகியோர் அடங்கிய அமர்வு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!