விசேட சுற்றிவளைப்பின் போது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட மற்றும் சந்தேக நபர்கள் சிலர் பொலிஸாரால் கைது

Kanimoli
2 years ago
விசேட சுற்றிவளைப்பின் போது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட மற்றும் சந்தேக நபர்கள் சிலர் பொலிஸாரால் கைது

  கல்கிஸை, படோவிடவத்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட மற்றும் சந்தேக நபர்கள் சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 9 பேர் மற்றும் ஏனைய 14 சந்தேக நபர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் கைதான சந்தேக நபர்கள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!