சட்ட விரோதமான ஆவணங்கள்: டயானாவுக்கு எதிரான பயணத்தடை நீட்டிக்கப்படும்!
Mayoorikka
2 years ago

சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை எதிர்வரும் 15ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திரு.நந்தன அமரசிங்க இன்று (17) உத்தரவிட்டுள்ளார்.
டயானா கமகேவின் பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு என்பன சட்டவிரோதமானதும் போலியானதும் எனத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று மீளப்பெற்ற போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



