அவுஸ்திரேலிய சிறையில் இருந்த கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு கடுமையான நிபந்தனைகளின் கீழ்பிணை!

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலாவுக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
பாலியல் முறைகேடு குற்றச்சாட்டின் பேரில் $150,000 பிணையில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
தனுஷ்க குணதிலக்கவின் இரண்டாவது பிணைக் கோரிக்கை இன்று (17) சிட்னியில் உள்ள டவுனிங் சென்ட்ரல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே அவருக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தினமும் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை வெளியில் செல்லக் கூடாது,, அவரது சமூக ஊடகங்கள், டேட்டிங் செயலிகள் எதையும் அணுகக்கூடாது, அவரது பாஸ்போர்ட் பறிக்கப்பட்டுள்ளதால் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற முடியாது.
தனுஷ்க குணதிலக்க தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிட்னி யுவதி ஒருவர் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து அண்மையில் கைது செய்யப்பட்ட தனுஷ்க குணதிலவை எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிட்னி நீதிமன்றம் உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது



