போலந்தில் விழுந்த ஏவுகணைக்கு ரஷ்யா பொறுப்பேற்க வேண்டும்: ஐநா பாதுகாப்பு சபையில் கடும் வாக்குவாதம்

Mayoorikka
2 years ago
போலந்தில் விழுந்த ஏவுகணைக்கு ரஷ்யா பொறுப்பேற்க வேண்டும்: ஐநா பாதுகாப்பு சபையில் கடும் வாக்குவாதம்

உக்ரைன் எல்லைக்கு அருகே அமைந்துள்ள போலத்தின் நிலப்பரப்பில்; ஏவுகணை தாக்குதல் நடந்ததற்கு ரஷியா பொறுப்பேற்க வேண்டும் என்று குற்றம் சுமத்தி, அமெரிக்காவும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில்; நேற்று ரஷியாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டன.

சபையில் உரையாற்றிய அமெரிக்க தூதர் லிண்டா தோமஸ்-கிரீன்பீல்ட் 'உக்ரைன் மீது ரஷ்யாவின் தேவையில்லாத ஆக்கிரமிப்பு மற்றும் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்கள் காரணமாகவே போலந்தின் மீது ஏவுகணை தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்று குறிப்பிட்டார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரைனை  கைப்பற்ற முடியாவிட்டால், உக்ரைன் நாட்டை அடிபணிய வைக்க முயற்சிப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து உரையாற்றிய ரஷிய தூதர் வசிலி நெபென்சியா உக்ரைனும் போலந்தும் ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையே நேரடி மோதலைத் தூண்டுவதற்கு முயற்சி செய்கின்றன என்று குற்றம் சுமத்தினார்.

உக்ரைனின் உட்;கட்டமைப்பு மீது தாக்குதல்களை ரஷ்யா தாக்குதல் நடத்தாது,
உக்ரைனின் ராணுவ திறனை பலவீனப்படுத்துவதன் மூலம்  நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய வேண்டிய கட்டாயத்தில் ரஷ்யா உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான துணைப் பொதுச்செயலாளர் ரோஸ்மேரி டிகார்லோ தமது உரையில்,போலந்தில் விழுந்த ஏவுகணை தாக்குதல் ரஷ்யாவின் மிகத் தீவிரமான குண்டுவீச்சு தாக்குதல்களில் ஒன்று.

இந்த தாக்கம் வரவிருக்கும் குளிர்கால மாதங்களில் மோசமடையக்கூடும். என்று எச்சரித்தார்;.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யப் போர் இல்லாதிருந்தால் அந்த அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

 
 
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!