இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நட்புறவை சீர்குலைக்கும் உள்நோக்கம் கொண்ட எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது - வஜிர அபேவர்தன

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பாரம்பரிய நட்புறவை சீர்குலைக்கும் உள்நோக்கம் கொண்ட எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கை-சீன உறவுகளை மேலும் வலுப்படுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் உறுதியளித்துள்ளார்
கொழும்பில் உள்ள சீனத் தூதுவருடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் அபேவர்தன இந்த உறுதிமொழியை வழங்கினார்.
1952 ஆம் ஆண்டு அப்போதைய ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்தினால் கைச்சாத்திடப்பட்ட ரப்பர்-அரிசி ஒப்பந்தம் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளுக்கு உறுதியான அடித்தளத்தை அமைத்ததாக இந்த சந்திப்பின் போது அவர் தெரிவித்தார்.
அதற்கமைய, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் செயற்படவுள்ளதாக வஜிர அபேவர்தன குறிப்பிட்டார்.



