அரசாங்கத்திற்கு நெருக்கமான சிலர் முட்டை மற்றும் கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய முயற்சி

Prabha Praneetha
2 years ago
அரசாங்கத்திற்கு நெருக்கமான சிலர் முட்டை மற்றும் கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய முயற்சி

சில விற்பனையாளர்கள் கோழி முட்டை மற்றும் கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய முயற்சித்து வருவதாக தேசிய விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டுக்கு தேவையான முட்டை மற்றும் கோழி இறைச்சி என்பன போதுமான அளவில் நாட்டுக்குள் உற்பத்தி செய்யப்பட்ட போதிலும் நிலவும் கோழித் தீவனம் தொடர்பான பிரச்சினை காரணமாக இரண்டு தொழில்களும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சஞ்ஜீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்.

ஏற்பட்டுள்ள இந்த நிலைமையை பயன்படுத்தி முட்டை மற்றும் கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய முயற்சித்து வருகின்றனர்.

அத்துடன் தற்போது முட்டை ஒன்றின் உற்பத்தி செலவு 48 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதனால், அரசாங்கம் நிர்ணயித்துள்ள கட்டுப்பாட்டு விலைக்கு முட்டைகளை வழங்க முடியாது.

ஏற்பட்டுள்ள இந்த நிலைமை காரணமாக முட்டை மற்றும் கோழி இறைச்சி உற்பத்தி தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் அதனை கைவிட ஆரம்பித்துள்ளனர் எனவும் சஞ்ஜீவ தம்மிக்க மேலும் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!