இலங்கையில் மீண்டும் பால்மாவிற்கு தட்டுப்பாடு: திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட 15 கொள்கலன்கள்

Mayoorikka
2 years ago
இலங்கையில் மீண்டும் பால்மாவிற்கு தட்டுப்பாடு: திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட 15 கொள்கலன்கள்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கு மீண்டும் தட்டுப்பாட்டு நிலை உருவாக்கவுள்ளதாக  பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அதன் தலைவர் லக்க்ஷமன் இவ்வாறு தெரிவித்தார்.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளரின் செயற்பாட்டின் காரணமாக இலங்கையில் மீண்டும் பால் மா  தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உரிய நேரத்தில் ஆவணங்கள் கையளிக்காமை கடன் சான்று பாத்திரங்களை தாமதப்படுத்தியமை உள்ளிட்ட காரணங்களினால் 15 கொள்கலன்கள் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாட்டில் இருந்து பால் மா பவுடரை விநியோகிக்கும் முகவர்கள் இந்தப் பால் மாவை வியட்நாம் மற்றும் இந்தோனேஷியாவுக்கு மீண்டும் அனுப்புமாறு கூறுகிறார்கள் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!