அடுத்தாண்டுக்கான வரவு செலவு திட்டம் சிறப்பானதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தகவல்
Kanimoli
2 years ago

அடுத்தாண்டுக்கான வரவு செலவு திட்டம் சிறப்பானதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றியிருந்தார்.
இதன் பின்னர் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறிய மஹிந்தவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
“நல்லதொரு வரவு செலவு திட்டம். வேறு என்ன கூறுவது நல்ல வரவு செலவு திட்டம். அவ்வளவு தான்” என மஹிந்த கூறியுள்ளார்.
அப்படி என்றால் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சமர்ப்பித்த வரவு செலவு திட்டத்தை விடவும் இது நல்லதென கூறுகின்றீர்களா என மஹிந்தவிடம் ஊடவியலாளர்கள் வினவியுள்ளனர்.
அதற்கு பதிலளித்த மஹிந்த தேவையில்லாத கேள்விகளை அல்லவா கேட்கின்றீர்கள் என கூறிவிட்டு வேறு கேள்விகளுக்கு பதிலளிக்காமல் சென்றுள்ளார்.



