தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பதவியை இழக்கலாம் - மஹிந்த யாபா அபேவர்தன
Kanimoli
2 years ago

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை உடையவர்களாக காணப்படுவதால் சிலர் பதவியை இழக்கலாம் என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன கருத்து தெரிவித்துள்ளார்.
தனக்கு தெரிந்த வகையில் இரண்டு மூன்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இவர்களைத் தவிர வேறும் எவரும் இவ்வாறு நாடாளுமன்றில் அங்கம் வகிக்கின்றார்களா என்பது தமக்குத் தெரியாது எனறும் அவர்கள் பதவி இழக்கும் அவாயம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதனை தவிர வேறும் வழியில்லை என சபாநாயகர் தெற்கு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.



